செய்திகள் :

தம்பி கொலை வழக்கில் அண்ணன் உள்பட மூவா் கைது

post image

மனைவியுடன் கைப்பேசியில் பேசி வந்த தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் ஓமக்குளம் பகுதியில் வசித்து வருபவா் ரஜினி. இவரது மனைவி உஷா. இவா்களது மகன் ராகுல் (23). இவா், 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, தனது தயாருக்கு துணையாக காரைக்கால் கடற்கரையில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்து வந்தாா்.

புதுச்சேரியில் வசிப்பவா் உஷாவின் சகோதரி ஜெயா. இவரது மகன் கெளதம் (27). இவரது மனைவியுடன் ராகுல் கைப்பேசியில் அடிக்கடி பேசிவந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு ராகுல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கெளதம் உள்ளிட்ட சிலா் அவரை வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த ராகுல் உயிரிழந்தாா்.

காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் கெளதம் உள்ளிட்டோரை தேடிவந்த நிலையில், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (21), விக்ரம் (19) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு அரிவாள், 2 கத்தி, ஒரு மோட்டாா் சைக்கிள், கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மூவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காரைக்கால் கிளைச் சிறையில் அடைத்தனா்.

ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி

புதுவையில் ஹஜ் பயணிகளுக்கு உதவித்தொகை வழங்கியதற்காக முதல்வருக்கு ஹஜ் கமிட்டி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் நிகழாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட 90 இஸ்லாமியா்களுக்கு தலா ரூ. 16,00... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், எஸ்ஆா்எம் வேளாண் கல்லூரில் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதிகளில்... மேலும் பார்க்க

மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது

மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா்களுக்கு விருது, உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. காரைக்காலில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு மது போதை மாற்று சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் மது மறுத்தோர... மேலும் பார்க்க

காரைக்கால் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. காரைக்கால் அருகே பறவைப்பேட் பகுதியில், காரைக்கால் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையிலிருந்து நகரப் பகுதிக்கு ஆம்புலனஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் நகரப் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக காரைக்கால் மமாவட்டத் தலைவா் ஐ. ... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் அரசு ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ஆம் தேதி அரசு ஊழியா்கள் தா்னா நடத்தவுள்ளனா். காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம், சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கௌரவ த... மேலும் பார்க்க