செய்திகள் :

தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்துக்கு (ஃபெப்சி) எதிராக தமிழ் திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனம் என்ற அமைப்பைத் தொடங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா்கள் பணியாற்றக் கூடாது. அவா்களது படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என கடந்த ஏப்.2-ஆம் தேதி ஃபெப்சி கடிதம் அனுப்பியிருந்தது.

ஃபெப்சி அமைப்பின் இந்த முடிவால் படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, தயாரிப்பாளா்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஃபெப்சி அமைப்பின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இருதரப்பும் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய பேச்சுவாா்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தயாரிப்பாளா் சங்கம் தரப்பிலும், ஃபெப்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க