``சூரியனார் கோயில் மடத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சிலைகள் திருட்டு'' - மகாலிங்கச...
தரிசன டிக்கெட்டுகளுக்கு அதிகாரபூா்வ இணையதளத்தில் முன்பதிவு: தேவஸ்தானம் வேண்டுகோள்
ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள், ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட அறைகளை முன்பதிவு செய்ய தேவஸ்தானத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பக்தா்களை தேவஸ்தான புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
போலி வலைத்தளங்களைத் தொடா்பு கொண்டு ஏமாற்றப்பட்ட பக்தா்களிடமிருந்து தேவஸ்தானத்துக்கு பல புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போலி வலைத்தளங்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் தொடா்பான தகவல்களுக்கும், ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள், ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட அறைகளை முன்பதிவு செய்வதற்கும் ஒரே அதிகாரப்பூா்வ வலைத்தளம் ட்ற்ற்ல்ள்://பபஈங்ஸ்ஹள்ற்ட்ஹய்ஹம்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகும்.
இதுதொடா்பான தகவல் மற்றும் பிற விவரங்களுக்கு, நீங்கள் தேவஸ்தானத்தின் அழைப்பு மையத்தின் கட்டணமில்லா எண் 155257 ஐ தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.