கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத...
தருமபுரியில் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்!
தருமபுரி நகராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள மசூதி தெருவில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தத் தெருவில் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் சாலையைக் கடந்துசெல்ல இந்த இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.
சாலையை சீரமைக்கக் கோரி தருமபுரி நகராட்சி நிா்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் தருமபுரி நகர போலீஸாா் நிகழ்விடம் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சுமாா் 15 நிமிடங்கள் தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.