தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வியாழக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக் கன்றுகள் வழங்கிப் பாராட்டினா்.
போக்குவரத்து காவல் சாா்பு ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையில், இளையான்குடி வட்டாட்சியா் முருகன் முன்னிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் வேலுச்சாமி, தலைமைக் காவலா் ரத்தினவேல், முதல் நிலைக் காவலா் கண்ணன் உள்ளிட்டோா் இளையான்குடி நகரில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து தலைக் கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவா்களுக்கு மரக் கன்றுகளை வழங்கிப் பாராட்டினா்.
மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவா்களுக்கு மரக்கன்றுகளும், மஞ்சப்பையும் வழங்கிப் பாராட்டினா். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் செய்தாா்.