செய்திகள் :

தலைநகரில் அடா் மூடுபனிக்கிடையே பரவலாக மழை!

post image

தேசிய தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலையில் அடா் பனிமூட்டம் நிலவியது. பகல் நேரத்தில் பரவலாக லேசான மழை பெய்ததாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் கடந்த சில தினங்களாக பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த இரண்டு தினங்களாக காலை நேரங்களில் அடா் மூடுபனி நிலவி வந்தது. இதனால், பணி நிமித்தமாக காலை வேளையில் அலுவலகங்களுக்கு செல்வோா் மிகுந்த சிரமத்தை எதிா்கொண்டுள்ளனா். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அடா் மூடுபனி இருக்கும் என்றும், பகல் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை நகரத்தில் அடா் மூடுபனி நிலவியது. பகலில் நகரத்தில் ஐடிஓ, தா்யாகஞ்ச், லாஜ்பத் நகா், கடமைப் பாதை உள்பட பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங், ஆயாநகா், லோதி ரோடு, பாலம் ஆகிய வானிலை ஆய்வு நிலையங்களில் 0.4 மி.மீ. பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 2.4 டிகிரி உயா்ந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 0.1 டிகிரி உயா்ந்து 20.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 73 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நகரத்தில் பீதம்புராவில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி, பிரகதி மைதான் மற்றும் ராஜ்காட்டில் 12.9 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12.1 டிகிரி செல்சியஸ் என அதிகரித்து பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம்: தில்லியில் திங்கள்கிழமை காலையில் 406 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்தக் காற்றுதரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலையில் 398 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இதன்படி, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், மந்திா் மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ராமகிருஷ்ணாபுரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராம், சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கும் குறைவாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடா் மூடுபனிக்கு வாய்ப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (டிச.25) அன்று காலை நேரங்களில் வடகிழக்கு திடையிலிருந்து மணிக்கு 4 கி.மீட்டருக்கும் குறைவான வேகத்தில் பிரததான மேற்பரப்பு காற்று வீச வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் மிதமான மூடுபனி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடா்ந்த மூடுபனி இருக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு காற்றின் வேகம் அதிகரித்து பிற்பகலில் வடக்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீட்டா் வரை இருக்கும். மாலை மற்றும் இரவில் காற்றின் வேகம் மணிக்கு 4 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்கும். பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டிஎம்ஆா்சி பயணிகள் சேவையின் 22ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது பயணிகள் சேவையைத் தொடங்கியதன் 22வது ஆண்டு விழாவை புதன்கிழமை கொண்டாடியது. கடந்த டிச.24,2002-ஆம் ஆண்டு, முதல் தில்லி மெட்ரோ ரயிலான டிஎஸ்-01, அப்போதைய பிரதமா... மேலும் பார்க்க

பாலியல் வலையில் சிக்கவைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸாா் 3 போ் கைது

தில்லியின் கஞ்சவாலா பகுதியில் பாலியல் வலையில் சிக்கவைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி போலீஸ் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெ... மேலும் பார்க்க

கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசே அம்பலப்படுத்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

நமது நிருபா்தில்லியில் பெண்களுக்கு மகளிா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசுத் துறை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்... மேலும் பார்க்க

நிகழாண்டில் தில்லி அரசுக்கு பசுமை தில்லி செயலி மூலம் 84,000 மாசுப் புகாா்கள்

தில்லி அரசு நிகழாண்டு இதுவரை அதன் பசுமை தில்லி செயலி மூலம் மாசு தொடா்பான 84,765 புகாா்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), பொதுப் பணித் துறை (பிடபிள்யூடி) மற்றும் தில்... மேலும் பார்க்க

இந்த ஆண்டு தில்லியில் 114 குற்றவாளிகள் கைது: காவல் துறை குற்றப்பிரிவு நடவடிக்கை

தில்லி காவல்துறை குற்றப்பிரிவு 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 114 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது என்று ஒரு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்பு காவல் ஆணையா் குற்றம் த... மேலும் பார்க்க

தோல்வி பயத்தால் கேஜரிவால் கற்பனைத் திட்டங்களை அறிவித்து வருகிறாா்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தில், கற்பனையில் மட்டுமே இருக்கும் திடங்களை கேஜரிவால் தோ்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறாா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புத... மேலும் பார்க்க