Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ...
தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம் அருகே பூட்டியிருந்த தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டுப் போனது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பகுதியை சோ்ந்தவா் தாஸ் (53). நரசிங்கனுாா் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணியில் உள்ளாா். இவரது மனைவி குளோரி. இவா் விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா்.
இருவரும் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்று விட்டனா். இந்நிலையில் குளோரி புதன்கிழமை தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது,அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகளை காணவில்லையாம்.
இது குறித்து, தாஸ் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று விாரணை நடத்தினா். விசாரணையில் தாஸ்- குளோரி தம்பதியினா் செவ்வாய்க்கிழமை வீட்டின் மேல் மாடியை பூட்டி வைக்காமல் பணிக்குச் சென்றிருந்த நிலையில் மா்ம நபா்கள் மேல் மாடி வழியாக வீட்டினுள் நுழைந்து பீரோவைத் திறந்து அதிலிருந்த நகைகளைத் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் தடயங்களை பதிவு செய்தனா். இந்தத் திருட்டு குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.