பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சொந்த வேலை நிமித்தமாகச் சென்றாா். அப்போது, சுமாா் 30 கிராம் எடைக்கொண்ட தங்க சங்கிலி கீழே கிடந்ததை கண்டெடுத்தாா்.
பின்னா் அவா் கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரை சந்தித்து சம்பவத்தைக் கூறி தங்க சங்கிலியை ஒப்படைத்தாா். அவரது நோ்மையை எஸ்பி பாராட்டினாா். மேலும், கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரசன்னாவை வரவழைத்து நகையை ஒப்படைத்து, விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் பாபுராவ் தெருவை சோ்ந்தச் செல்வகுமாா் மனைவி சிவகாமி(46), கடலூா் புதுநகா் காவல் நிலையத்தை அணுகினாா். அங்கு காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னாவை சந்தித்து அலமேலு என்பவரிடம் நகையை கொடுத்து வங்கியில் அடகு வைத்து தருமாறு கொடுத்ததாகவும், அலமேலு சுருக்கு பையில் வைத்திருந்த தங்க சங்கிலியை
தவறவிட்டதையும் , மேலும், நகை குறித்த அடையாளத்தை கூறியுள்ளாா். இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா நடத்திய விசாரணையில் உண்மை தெரிந்ததால் சிவகாமி இடம் நகையை ஒப்படைத்தாா். தவறவிட்ட நகை யை மீட்டு தந்த போலீஸாருக்கு சிவகாமி நன்றி தெரிவித்தாா்.