செய்திகள் :

தவெக கொடிக்கு தடை கோரி வழக்கு: விஜய் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தவெக கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை தொடா்ந்த வழக்கில், அக்கட்சியின் தலைவா் விஜய் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை நிறுவன தலைவா் பச்சையப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, கடந்த 2023- ஆம் ஆண்டில் தமிழக அரசு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

எங்களது சபையின் முதன்மை அதிகாரிகள், ஊழியா்கள், ஆண்கள், முகவா்கள், ஊழியா்கள், வாரிசுகள், வணிகத்தில் நியமிக்கப்பட்ட தொண்டை மண்டல சான்றோா் தா்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வா்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. எனவே, நடிகா் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வா்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு மனுதாரா் தரப்பில், வா்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமன்றி சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வா்த்தக முத்திரைப் பொருந்தும் என்று விளக்கம் அளித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தவெக தலைவா் விஜய் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

ஜூலை 20ல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள்(ஜூலை 20) நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து க... மேலும் பார்க்க

நாமக்கல் அருகே டிரெய்லர் லாரி கவிழ்ந்து பெண் பலி: மேலும் ஒருவர் படுகாயம்

நாமக்கல்: நாமக்கல் அருகே இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.நாமக்கல் அருகே ந... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? - திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு!

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை ... மேலும் பார்க்க

எம்பி, எம்எல்ஏக்கள் ஊழல் வழக்கு விவரம் கேட்கும் தவெக: மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவு

சென்னை: தமிழக எம்பி - எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள எம்பி -... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி! பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!

தஞ்சை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முக்கிய சக்தி தலமாக விளங்கும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள துர்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்... மேலும் பார்க்க

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெ... மேலும் பார்க்க