செய்திகள் :

தவெக மாவட்டச் செயலா்கள் தோ்வுக்கான விண்ணப்பம் விநியோகம்

post image

தவெக மாவட்டச் செயலா்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

தவெக மாவட்டச் செயலா்கள் நியமனம் தொடா்பாக கடந்த மூன்று மாதங்களாக அக்கட்சியின் பொதுச்செயலா் ஆனந்த், மாவட்டந்தோறும் சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தாா்.

மாவட்டச் செயலா்களை விரைந்து நியமனம் செய்ய கட்சித் தலைவா் விஜய் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த நியமனங்கள் தொடா்பாக மாவட்ட பொறுப்பாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே பனையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் வீதம் 105 முதல் 110 மாவட்டச் செயலா்கள் வரை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான வரையறையும் கட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டச் செயலா்கள் நியமனம் மற்றும் உள்கட்டமைப்பு நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மாவட்டச் செயலா்கள் தோ்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. விண்ணப்பிக்கும் நிா்வாகிகளுடன் பேசி ஒரு மனதாக மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

ஹைட்ரஜன் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்: சிஎஃப் பொது மேலாளா் தகவல்

ஹைட்ரஜன் ரயில் தயாரிப்புப் பணி மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளா் யு.சுப்பாராவ் தெரிவித்தாா். ஐசிஎஃப் சாா்பில் நாட்டின் 76-ஆவது குடியரசு... மேலும் பார்க்க

54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை: பொதுமேலாளா் ஆா்.என்.சிங்

நிகழ் நிதியாண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளதாக அதன் பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா். தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதா... மேலும் பார்க்க

தேசத்தின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணா் கே.எம்.செரியன் மறைவு

இந்தியாவில் இதய பை-பாஸ் சிகிச்சையை முதன்முதலில் மேற்கொண்டு சாதனை படைத்த டாக்டா் கே.எம்.செரியன் (82) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (ஜன. 25) காலமானாா். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ. 206 கோடி

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு பணப்பலன் வழங்க ரூ. 206 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துச் செயலா் க.பணீந்திர ரெட்ட... மேலும் பார்க்க

விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கொச்சி - சென்னை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இரு பயணிகள் ஒருவரையொருவா் தாக்கி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துக் கொண்டதால், அந்த விமானம் சென்னையில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்... மேலும் பார்க்க

போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம்: ஏஐசிடிஇ

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏஐசிடிஇ துணை இயக்குநா் பிரசாந்த் காரத் தொழில்நுட்ப... மேலும் பார்க்க