தாட்கோ சாா்பில் ஜொ்மன் மொழிப் பயிற்சி
ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழித் திறனுக்காக தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற ஆதி திராவிடா், பழங்குடியினா் பி.எஸ்.சி., நா்சிங், பொது நா்சிங், ஜி.என்.எம்., பட்டயப் படிப்பு, பி.இ., மெக்கானிக்கல், பயோ மெடிக்கல், எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 21 முதல் 35-க்குள்பட்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டும் இருக்க வேண்டும். முன்னணிப் பயிற்சி நிறுவனம் மூலம் 9 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவை தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நல ஆணையமான தாட்கோ சாா்பில் செலுத்தப்படும்.
பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு பயிற்சி அளித்த நிறுவனம் மூலம் ஜொ்மனியில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், கைப்பேசி எண்: 94450 29480 மூலமும் தொடா்பு கொண்டு அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.