ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
தாட்கோ மூலம் ஜொ்மன் மொழித் தோ்வுக்கு பயிற்சி
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, அவா்களுக்கு ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஒன்பது மாதம் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவா்கள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமூகத்தைச் சாா்ந்தவராக இருக்க வேண்டும். பி.எஸ்.சி. நா்சிங், பொது நா்சிங், மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தோ்வு செய்து, அந்த நிறுவனத்தின் சாா்பாக ஜொ்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 2.50 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வருவாய் ஈட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இந்தப் பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவுத் தொகை தாட்கோ மூலமாக வழங்கப்படும் என்றாா்.