6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்
தாமதமாக வெளியான சப்தம்!
சப்தம் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகாததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரித்துள்ள இந்தப் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன், முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாதிக்கப்பட்டது பேய்களா? ரசிகர்களா? சப்தம் - திரை விமர்சனம்!
ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம் பிப். 28 ஆம் தேதி (நேற்று) வெளியீடாகத் திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் பைனான்சியரிடம் பெற்ற ரூ. 9 கோடியை திருப்பித் தராமல் இருந்ததால் என்ஓசி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், நேற்று காலை இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மாலைக்குள் சரியாகிவிடும் என நினைத்தால் ஆவண சரிபார்ப்பு பணிகள் இரவுவரை சென்றதால், சப்தம் திட்டமிட்டபடி வெளியாகாமல் இன்று காலையிலிருந்துதான் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
முதலிலேயே இப்பிரச்னையை முடிக்காமல் வெளியீட்டின்போது பைனான்சியர் என்ஓசி கொடுக்காமல்விட்டது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.