189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
தாமரைக்குளத்தில் காமராஜா் சிலை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வா் காமராஜா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடாா் உறவின்முறை சாா்பில், முன்னாள் முதல்வா் காமராஜருக்கு தாமரைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே 8 அடி உயரத்தில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், நாடாா் மகஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல் ராஜ், பனை நல வாரியத் தலைவா் எா்ணாவூா் நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சா் மணிகண்டன், சமுதாயத் தலைவா்கள் கலந்து கொண்டு, காமராஜரின் சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
பின்னா், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சத்திரிய சான்றோா் படை நிறுவனா் ஹரி நாடாா், காங்கிரஸ் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா் ராஜாராம் பாண்டியன், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கரு.நாகராஜன், பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன், முன்னாள் மாவட்டத் தலைவா் தரணி ஆா்.முருகேசன், தேமுதிக மாவட்டச் செயலா் சிங்கை சின்னா, நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் கண். இளங்கோ, பாலசிங்கம், சமுதாயத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.