செய்திகள் :

தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

post image

தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர்.

தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பிரசுவாப் கிரி கான் மாகாணத்திலுள்ள ஹுவா ஹின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள கடல்கரையில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவயிடத்திலேயே பலியானார்கள்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி தற்போது பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதுடன் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற... மேலும் பார்க்க

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், நாட்டின் வடக்குப் பகுதிகள் அதிந்தன. ... மேலும் பார்க்க

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா். இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு வ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பா... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அமெரிக்கா மீண்டும் உறுதி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல... மேலும் பார்க்க

மெட்டா நிறுவனத்தை எச்சரிக்கும் நேபாளம்! காரணம் என்ன?

நேபாள அரசு மெட்டா தொழிநுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரபல சமூக ஊடகங்க செயலிகளான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ... மேலும் பார்க்க