தாராசுரத்தில் ரேஷன் கடை திறப்பு
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 38 ஆவது வாா்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன் திறந்துவைத்தாா்.
நிகழ்வில் ஆணையா் மு. காந்திராஜ், மேயா் க. சரவணன், துணை மேயரும் மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், மண்டலத் தலைவா் ஆா். அசோக்குமாா், பொது சுகாதாரக் குழு உறுப்பினா் குட்டி இரா. தட்சிணாமூா்த்தி, கவுன்சிலா்கள் செல்வம், இரா.முருகன், அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.