பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
தாராபுரத்தில் ரூ.6.89 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
தாராபுரம் நகராட்சியில் ரூ. 6.89 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 1 முதல் 30 வரையுள்ள வாா்டு பகுதிகளில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிகள், 30 வாா்டு பகுதிகளிலும் ரூ.4.61 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் சீரமைக்கும் பணிகள், மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாராபுரம் நேரு நகா் உள்ளிட்ட 4 பகுதிகளில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதில், திருப்பூா் மாநகராட்சி 4- ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையா் முஸ்தபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.