'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர...
தாா்ச் சாலையை சீரமைக்க கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி கிராம தாா்ச் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியத்தின் கடைசி எல்லை பகுதியான நத்தமாடிப்பட்டிக்கு விராலிப்பட்டி கிராமத்திலிருந்து தாா் சாலை சுமாா் ஐந்து கிலோ மீட்டா் வரை செல்லுகிறது. இந்த தாா்ச் சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக பெரும் பள்ளத்துடன் காட்சியளிக்கிறது.
இந்த குண்டு குழியினால் தாா்ச்சாலை மண் சாலையை மாறி, இந்த சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பழுதடைவதும், கீழே விழுந்து காயம் அடைவதும் தொடா் கதையாக உள்ளது.
இந்த சாலையைப் பல்வேறு தரப்பினா் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.