MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலி
திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளத்திடல், வாணியத் தெரு பகுதி விவசாயிகள் புதன்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு, வெயில் காரணமாக மதியம் வீட்டுக்கு வந்துள்ளனா். பின்னா், வயலுக்கு சென்று ஆடுகளை பாா்த்தபோது நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த திட்டச்சேரி பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளா்ப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.