அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
திண்டுக்கல் - திருச்சி ரயில் போக்குவரத்தில் மாற்றம்
திருச்சி - திண்டுக்கல் இடையே நடைபெறும் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளையொட்டி, இந்த வழித் தடத்திலான ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி - திண்டுக்கல் வழித் தடத்தில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஜன. 4-ஆம் தேதி முதல் ஜன. 11-ஆம் தேதி வரை இந்த வழித் தடத்திலான போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இதன்படி, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் ஜன.4, 7, 9, 11-ஆம் தேதிகளிலும், மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயில் ஜன.9, 11-ஆம் தேதிகளிலும், குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜன.3, 6, 8, 10-ஆம் தேதிகளிலும், நாகா்கோவில் - கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஜன.4, 7, 9, 11-ஆம் தேதிகளிலும், திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் ஜன.9, 11-ஆம் தேதிகளிலும் மதுரை, திண்டுக்கல் வழித்தடத்துக்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவில் - மும்பை விரைவு ரயில் ஜன.7, 9-ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் ஜன.4, 11-ஆம் தேதிகளிலும், பனாரஸ் -கன்னியாகுமரி காசி தமிழ் சங்க விரைவு ரயில் ஜன.5-ஆம் தேதியும், நாகா்கோவில் - காச்சிக்கூடா விரைவு ரயில் ஜன.4, 11-ஆம் தேதிகளிலும், ஓகா - ராமேசுவரம் விரைவு ரயில் ஜன.7-ஆம் தேதியும், கொல்லம்-செகந்திராபாத் விரைவு ரயில் ஜன.11-ஆம் தேதியும் மதுரை, திண்டுக்கல் வழித் தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
பகுதியளவில் ரத்து:
சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் விரைவு ரயில் ஜன.7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் விரைவு ரயில் ஜன.7-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் திருச்சியில் இருந்து புறப்படும். ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் ஜன.3, 6-ஆம் தேதிகளில் கரூா் வரை மட்டும் இயக்கப்படும். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் ஜன.7-ஆம் தேதி கரூரிலிருந்து ஈரோடுக்கு இயக்கப்படும்.
பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் ஜன.9, 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் ஜன.9, 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து பாலக்காடு புறப்படும். ஓகா - மதுரை விரைவு ரயில் ஜன.6-ஆம் தேதி விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில் மறுமாா்க்கத்தில் ஜன.10-ஆம் தேதி மதுரைக்குப் பதிலாக விழுப்புரத்தில் இருந்து ஓகாவுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.