செய்திகள் :

தினமணி இணையதள வாசகர்களின் புத்தாண்டு தீர்மானங்கள்!!

post image

புத்தாண்டு என்றாலே புதிய காலண்டர் வாங்குவது எப்படி தவிர்க்க முடியாததோ அதுபோலவே புத்தாண்டு தீர்மானம் எடுப்பதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதோ புத்தாண்டும் வந்துவிட்டது...

தினமணி வாசகர்கள் சிலரிடம் புத்தாண்டையொட்டி எடுத்துள்ள தீர்மானங்களைப் பற்றிக் கேட்டபோது பகிர்ந்துகொண்டவை:

எல்லா வாசகர்களுமே இதுபோல எடுக்கலாமே நல்ல தீர்மானங்களை.. வெறும் தீர்மானம் எடுப்பதோடு நின்றுவிடாமல் அதனை முயற்சித்து வெற்றி பெறவும் புத்தாண்டில் வாழ்த்துகள்.

சந்திரன், வயது 33, கும்மிடிப்பூண்டி

’காலம் பொன் போன்றது’ என்பதனால் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். கூடுமான வரையில் பொறுமையைக் கடைப்பிடித்துக் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இனியவன், வயது 28, தஞ்சாவூர்

புத்தகம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். முடிந்த அளவுக்கு கவனச் சிதறல்களைக் குறைக்க வேண்டும். தினமும் தவறாது 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும்.

ஆ. இராசா, வயது 29, சென்னை

வாழ்வில் ஒருவர் எடுக்கும் முடிவுகள் அவரின் எதிர்காலத்தை மாற்றியமைக்கிறது. ஒரு விஷயத்தில் இதுதான் என் முடிவு என்ற இடத்திற்கு வரப் பெரும் போராட்டம் நடக்கிறது. இதற்காக பலரிடமும் ஆலோசனைகள் கேட்போம். பிறகு ஒரு தெளிவான நிலைக்கு வந்து, இதுதான் என் முடிவு என்ற நிலைக்கு வருவோம். இது பலருக்கும் பொருந்தும். என்னால் இது முடிவதில்லை. இதனை வரும் ஆண்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்பதைப் போன்று, அவற்றைப் பரிசீலனைக்கும் இடம் கொடுக்க வேண்டும்.

ரீவைண்ட் 2024 : தினமணி சிறப்புக் கட்டுரைகள் படிக்க கிளிக் செய்யவும்..

லியோ, வயது 25, திருப்பூர்

மாதம் குறைந்தது மூன்று புத்தகங்கள் படிக்க வேண்டும். மாரத்தான் ஓட வேண்டும். ஒரு செயலைச் செய்வதை பின்பு தள்ளிப் போடுதலைத் தவிர்க்க வேண்டும்.

ராஜன், வயது 38, ஸ்ரீவில்லிபுத்தூர்

2025 இல் அதிகளவில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் தேவையற்ற பயணச் செலவுகளைக் குறைக்க முடியும். பேசுவதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் தேவையில்லாமல் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஹரேஷ், வயது 28, செங்கல்பட்டு

புத்தகம் படிக்கும் பழக்கத்தை 2025 முதல் தொடங்க வேண்டும். பெயரளவில் சில புத்தகங்களைப் படித்துவிட்டு நிறுத்திவிடாமல், தொடர்ந்து வாசிப்பைப் பழக்கமாக்கத் திட்டம்.

மேலும், புத்தாண்டில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கையை தொடங்கவும் திட்டம்.

ஆதினி, வயது 32, திருநெல்வேலி

கடந்த ஓராண்டு காலமாக குடும்பத்தைக் கவனிக்கும் நான், என்னுடை ஆரோக்கியத்தை சரியாகக் கவனிப்பதில்லை. எனவே, புத்தாண்டிலிருந்து நாள்தோறும் அரை மணி நேரமாவது வாக்கிங் செல்ல வேண்டும், சத்தான உணவுகளுடன் கூடிய டயட்டை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியம் கருதி வீட்டில் முடிந்தவரை கோபப்படாமல், டென்ஷன் ஆகாமல் இருக்க வேண்டும், மனதில்பட்டதைப் பேசிவிட வேண்டும் என முடிவு.

தனிப்பட்ட வேலைப்பளுவினால் புத்தகங்கள் படிப்பது 'அவ்வப்போது' என்ற நிலையிலேயே இருக்கிறது. இதை வழக்கம்போல கொண்டுவர வேண்டும். திரைப்படங்கள் பார்ப்பதையும் தொடர வேண்டும். குறைந்தபட்ச சேமிப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்க வேண்டும்.

சிவா, வயது 22, ராமநாதபுரம்

நடப்பைவிட இன்னும் அதிகமாக பாரம்பரிய இசை குறித்தும், இசைக் கருவிகள் குறித்தும் அதிகம் படிக்க / தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல், தமிழக வரலாறு குறித்து அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும். காலை உணவு தவறாமல் சாப்பிட வேண்டும்.

தமிழ், வயது 43, செவ்வாய்ப்பேட்டை

2025 ஆம் ஆண்டு நிச்சயம் நல்ல ஆண்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே முதல் இலக்கு. நிதித் துறை மேலாண்மை பற்றி அறிந்துகொண்டு, அதில் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும். ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கற்க வேண்டும். அது மொழி அல்லது தொழில்நுட்பமாக இருக்கலாம். செல்ஃபோன் பயன்பாட்டைப் பயனுள்ளதாக மாற்றுவது.

செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கும் ஊர்களுக்குச் செல்வது. மனத்தடைகளை அகற்றிப் பிடித்த விஷயங்களுக்கு என நேரம் ஒதுக்க வேண்டும்.

பிரியங்கா, வயது 30, சென்னை

கடினமான சூழலைக் கையாள வேண்டும். அதீத உற்சாகத்துடன் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

ஷிவானி, வயது 34, கொளத்தூர்

புது வருஷம் பொறக்கப்போகுது. என்ன பிளான்? ரெசோல்யூஷன் என்ன? இப்படி பாக்றவங்க எல்லாம் நம்மள நச்சரிப்பாங்க... அட வருஷாவருஷம் நான் உள்பட எல்லாரும் செமயா பயங்கரமா இத பண்ணனும், அத பண்ணனும் அப்படியெல்லாம் பெரிசா பிளான் பண்ணுவோம்... ஆனா, நம்ம நினைக்கறதெல்லாம் நடக்குதா என்ன? அதுக்கெல்லாம் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் நமக்கு ஒதுத்துழைக்கனுமே... அதான முக்கியம்... சரி வருஷாவருஷம் பிளான் பண்றமாறி இந்த வருஷமும் ஏதாவது ரெசோல்யூஷன் எடுப்போம்.. அப்படினா....நம்மள சுத்தி என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு கோவப்படாம நிலைமையை சரியா அணுக முயற்சிப்பதே ஒரே குறிக்கோள். அடுத்ததா பெரிசா ஒண்ணுமில்ல? ஆரோக்கியமா சாப்பிடணும், ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணக்கூடாது... அவ்வளவுதான் பா..!

குரு, வயது 24, ராமநாதபுரம்

மாதம் 2 புத்தங்களாவது படிக்க வேண்டும், வாரம் 2 படங்களாவது பார்க்க வேண்டும். இரண்டிற்கும் நேரமில்லை என்றொரு காரணத்தைச் சொல்லக்கூடாது.

எழுதும் நேரத்தை அதிகப்படுத்துவேன். 3 வேளைகளும் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமல்ல என்பதை இந்த வருடமாவது புரிந்துகொள்ள வேண்டும். காசை சரியாகச் செலவழிக்க வேண்டும்.

முகமது, வயது 23, சென்னை

சொந்த விஷ் லிஸ்ட்டையும், ரெசொல்யூஷனையும் பட்டியலிட்டால் அது சிந்துபாத் தொடரைப் போல நீண்டு செல்லும். இருப்பினும், பொதுவாக எனக்கு வைத்திருக்கும் சிலவற்றை மட்டும் இங்கு பகிர விரும்புகிறேன்.

முதலாவதாக நான் செய்யவிருக்கும் செயல்களிலும் வேலையிலும் அந்நொடிக்கு எது சரியென்று படுகிறதோ அதை மட்டும் தெளிவாக செய்ய விரும்புகிறேன். செய்த பின்னர் அதை நினைத்து வருத்தமடையாமல் இருக்க அதற்கு ஏற்ற முடிவுகளை நான் எடுக்க விரும்புகிறேன்.

என்னை சார்ந்த மனிதர்களுக்கும் எனக்கும் நான் கூடுதல் கவனம் கொடுப்பது மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

அடுத்ததாக, பலகாலமாக முடிக்காமல் தொடர்கதையாக்கியுள்ள எனது சிறுகதைகளையும் நாவல்களையும் முயற்சி செய்து முடிக்க வேண்டும்.

அவ்வப்போது பயணம் மேற்கொண்டு அதனைப் பற்றி எழுத வேண்டும்.

முடிந்த அளவிற்கு செல்போன் இல்லாமல் இருக்க வேண்டும், செல்போனில் மட்டுமே தொடர்புகொள்ள முடிந்த என் மனிதர்களை நேரில் சந்தித்து உரையாட வேண்டும்.

இளையராஜா, வயது 28, திருப்பூர்

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து 5 கிமீ வரை நடைப்பயிற்சியை மேற்கொள்வதுடன் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சர்க்கரையைத் தவிர்ப்பதுடன் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள செயலிகளின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு ஆண்டிற்கு 100 புத்தகங்களை வாசிக்க வேண்டும். 5000 கிமீ வரை பயணங்கள் செய்ய வேண்டும்.

2025 டிசம்பர் 31-ல் என்னென்ன உறுதிப்பாடுகள் நிறைவேறியிருக்கின்றன, பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு: நாளை(ஜன.6) முன்பதிவு தொடக்கம்

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது ... மேலும் பார்க்க

பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்

பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர். தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று(ஜன.5... மேலும் பார்க்க

மணமாகி இரண்டே மாதங்கள்! பேருந்து மோதி காவல் உதவி ஆய்வாளர், கணவர் பலி!

சிதம்பரத்தில் திருமணமாகி இரண்டே மாதங்களான புதுமணத் தம்பதியர் விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அருகே சித்தாலபாடி பகுதியில் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசிய... மேலும் பார்க்க

உண்டியலில் விழுந்த ஐபோன் திருப்பி வழங்கப்படும்: உறுதியளித்த அமைச்சர் சேகர்பாபு!

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் கட... மேலும் பார்க்க

எம்.பி. சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரத்தில் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட எம்.பி. சு. வெங்கடேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா: ரூ. 14.60 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு வி... மேலும் பார்க்க