தினமணி செய்தி எதிரொலி முத்தன்குளத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை
தினமணி செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம், முத்தன்குளத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் நின்று செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
த்தன்குளம், காங்கேயன்குளம் கிராமங்கள் போதிய பேருந்து வசதியின்றி தவிப்பதாக தினமணியில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி-தென்காசி மாா்க்கத்தில் செல்லும் சாதாரணக் கட்டண பேருந்துகள் அங்கு நின்று செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முத்தன்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு வியாழக்கிழமை மாலையில் வந்த அரசு போக்குவரத்துக் கழக டிக்கெட் பரிசோதகா், அந்த வழியாக வந்த சாதாரணக் கட்டண பேருந்துகளை நிறுத்தி முத்தன்குளம் கிராமத்தில் நின்று செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் அப்பகுதி மகிழ்ச்சியடைந்துள்ளனா்.