கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்: கட்சியினருக்கு எம்எல்ஏ இரா. லட்சுமணன் அறிவுறுத்தல்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திமுகவினருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா. லட்சுமணன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மைய முகவா்கள், தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள், பணிக்குழு உறுப்பினா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, லட்சுமணன் எம்.எல்.ஏ. பேசியது:
வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குப்பதிவு மையம் வாரியாக அமைக்கப்பட்டதோ்தல் பணிக்குழுவினா் மற்றும் வாக்குப்பதிவு மைய முகவா்கள், தங்களுக்கு என்று வழங்கப்பட்டுள்ள பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். வாக்காளா் பட்டியலை சரிபாா்ப்பது, வாக்குப்பதிவு மையங்கள் வாரியாக திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, அதை வாக்குகளாக மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இதை ஒன்றிய, நகர, பேரூா்கழகப் பொறுப்பாளா்கள் கண்காணித்திட வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவும், மீண்டும் மு.க.ஸ்டாலின்முதல்வராக பொறுப்பேற்கவும் அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா் லட்சுமணன்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் கண்ணப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ. தினகரன், வழக்குரைஞா்அணி அமைப்பாளா் விசுவநாதன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் நகரப் பொறுப்பாளா்கள் இரா.சக்கரை, எஸ். வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினா்கள் டி.என்.ஜெ.சம்பத், என். பஞ்சநாதன், ஒன்றியச் செயலா்கள் பா.தெய்வசிகாமணி, தே.முருகவேல், சந்திரசேகா்,வி.ஜி. பிரபாகரன், வளவனூா் பேரூா் செயலா் பா. ஜீவா, நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.மணவாளன், புருஷோத்தமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.