செய்திகள் :

"திமுக ஆட்சி விளம்பரத்திற்கு மட்டுமே; பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது" - நயினார் விமர்சனம்

post image

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்து வருவதை திமுக அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டாக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மாநில உரிமைகளைக் காப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

பாமக அன்புமணி

இதைத் தொடர்ந்து தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை, பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருவதாக திமுக அரசை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா?

தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை, பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இது போதாதென்று, 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை, வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரச்சாரம் என உயர்க்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

ஒரு காலத்தில் ஆன்றோர்களால் "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" எனப் போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து, 'கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக' திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது.

ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது, 'அப்பா', 'பல்கலை வேந்தர்' என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில், கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். "ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும், பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்." என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

துர்கை கோயில் இடிப்பு; சாடிய இந்தியா... விளக்கமளித்த வங்கதேச அரசு!

வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நி... மேலும் பார்க்க

Disney cruise: நடுக்கடலில் விழுந்த 5 வயது மகள்; சட்டென குதித்த தந்தையின் வீரச் செயல்| Viral Video

டிஸ்னி க்ரூஸ் லைன் கப்பல் அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்ட கப்பல் சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்தக் கப்பல் சு... மேலும் பார்க்க

'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கடேஷன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேஷன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

பழனி : திருமண மண்டபம் கட்ட வெளியான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - நடந்தது என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த இந்து சமயப்... மேலும் பார்க்க

Tatkal Ticket, பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு... இன்று முதல் அமலாகும் விதிகள் என்னென்ன?

பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்... வாங்க...1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வரு... மேலும் பார்க்க

"ரூ.100 கோடி பிராஜெக்ட்; விபத்துக்காகவே ஒரு சாலை..." - மரங்களை நடுவே அப்படியே விட்டு போடப்பட்ட சாலை!

பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்... மேலும் பார்க்க