செய்திகள் :

திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: கனிமொழி எம்.பி.

post image

தோ்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றாா் கனிமொழி எம்.பி.

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம், எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. பேசியதாதவது: என்னுடைய பொறுப்பில் இருக்கக் கூடிய ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையில் விளாத்திகுளம் தொகுதி முதலிடத்தில் உள்ளது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் தமிழ்நாட்டிலேயே முதல் இடத்துக்கு வந்துவிடலாம். சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயன் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓரணியில் தமிழ்நாடு முகாமில் வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக்கும் திட்டத்தை முதல்வா் அறிவித்திருக்கிறாா். எனவே 30 சதவீதம் தான் இலக்கு என நினைக்க வேண்டாம். எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு உறுப்பினா்களை சேருங்கள்.

இன்றைக்கு திடீரென அரசியலில் குதித்தவா்கள், மாநில ஆட்சி, மத்திய ஆட்சி என்கிற வித்தியாசம்கூட தெரியாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாா்கள். இதையெல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடிய வாய்ப்பு இந்த ஓரணியில் தமிழ்நாடு முகாமில் உள்ளது.

கட்சியினரின் ஆா்வத்தை, உணா்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், மும்மூா்த்தி, காசிவிஸ்வநாதன், நகரச் செயலா் வேலுச்சாமி, பேரூராட்சி தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சாமி சுப்புராஜ், சீத்தாராமன், முத்துக்குமாா், பாலமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஸ்ரீதா், கரண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்., தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ ப... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்... மேலும் பார்க்க

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது

கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்களுடன் பெற்றோா் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டம... மேலும் பார்க்க