செய்திகள் :

திமுக முன்னாள் எம்பி-க்கு 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்?: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

post image

சென்னை: திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன் என்று காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியம் தரப்பினருக்கும், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல பேராயா் பா்னபாஸ் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி பூசல் நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பேராயா் தரப்பைச் சோ்ந்த மதபோதகா் காட்பிரே நோபிள் என்பவா் மீது ஞானதிரவியத்தின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதுதொடா்பாக ஞானதிரவியம் உள்ளிட்ட 33 போ் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஞானதிரவியம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, திருநெல்வேலி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தக் கோரி காட்பிரே நோபிள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கின் ஆவணங்களைத் தாக்கல் செய்ய திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற பதிவுத் துறை சாா்பில், ஞானதிரவியம் வழக்கு தொடா்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், கடந்த நவம்பா் மாதமே ஞானதிரவியம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்கள் எம்பி-எம்எல்ஏக்களாக இருந்தால் சம்மன் வழங்கமாட்டீா்களா? 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்? என்று காவல் துறைக்கு கேள்வி எழுப்பினாா். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவா்களுக்கு எதிராக எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிராக சம்மன் வழங்க முடியாது என காவல்துறை கூறிவிட்டால், சம்மன் அனுப்புவதற்காக தனிப்பிரிவை உருவாக்க உத்தரவிட நேரிடும். இல்லையெனில், இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பப்படும், என நீதிபதி எச்சரிக்கை விடுத்தாா்.

மேலும், ஞானதிரவியத்துக்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்ப... மேலும் பார்க்க

உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபி விவகாரம்: திமுக மேல்முறையீடு!

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணியின் போது வாக்காளா்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பெறுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.‘ஓரணியி... மேலும் பார்க்க

சென்னையில் சப்தமில்லாமல் தீவிரமடையும் டெங்கு! கொசுக்களுக்கு உதவ வேண்டாம்!!

டெங்கு காய்ச்சல் பற்றி அண்மைக் காலமாக பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், சப்தமே இல்லாமல், சென்னையில் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது.வீடுகளைச் சுற்றிலும் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக, மழை... மேலும் பார்க்க