திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் 6-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வியாழக்கிழமை அதிகாலை சிறுத்தை ஒன்று உலவியுள்ளது. அப்போது, அவ்வழியே காரில் சென்ற பயணிகள் சிறுத்தையை விடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில், திம்பம் மலைப் பாதை வழியாக செல்லும் பயணிகளை வாகனங்களைவிட்டு கீழே இறங்க வேண்டாம் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.