செய்திகள் :

`திராவிட இயக்கம் தோன்றியது ஏன் தெரியுமா?’ – விழுப்புரத்தில் விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

post image

விழுப்புரம் வழுதரெட்டியில் சமூக நீதிப் போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்காக அமைக்கப்பட்ட மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் உருவச்சிலையுடன் நினைவகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக கடந்த 27-ம் விழுப்புரம் வந்தார் முதல்வர் ஸ்டாலின். அன்றைய தினம் மாலை திண்டிவனத்தில் மக்களை சந்தித்தவர், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

திண்டிவனம் ரோடு ஷோவில் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

மறுநாள் 28-ம் தேதி மணிமண்டபத்தையும், நினைவகத்தையும் திறந்து வைத்த அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ``2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நான் வந்திருந்தபோது எம்.பி ஜெகத்ரட்சகனும், எம்.எல்.ஏ அன்னியூர் சிவாவும் என்னை சந்தித்து ஏ.ஜி என்ற ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

`எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை'

அப்போது தி.மு.க எதிர்கட்சியாக இருந்ததால், நாம் ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கொடுத்த வேலைகளை தட்டாமல் செய்து முடிப்பதே தன்னுடைய ஒரே பணி என்று வாழ்ந்தவர் ஏ.ஜி. அவருக்கு தி.மு.க மணிமண்டபம் அமைப்பதும், அதை நான் திறந்து வைப்பதும் எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை. அடுத்தது 21 சமூக நீதிப் போராளிகளுக்கான நினைவு மண்டபம்.

பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் முதல்வர் ஸ்டாலின்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்கள், தங்களின் சமூக நீதி உரிமையைக் கேட்டு 1987-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்தினார்கள்.  ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு அன்றைய அரசு செவிசாய்க்கவில்லை. அதேசமயம் 1989 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி இட ஒதுக்கீடு வழங்குவோம்’ என்று வாக்குறுதி கொடுத்தார் கலைஞர்.

அதன்படி அப்போது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த 43-வது நாளில் 20% இட ஒதுக்கீடு வழங்கிய வரலாறுதான் கலைஞரின் வரலாறு. அத்துடன் அப்போது உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.3 லட்சம் கருணைத் தொகையுடன் மாதம் ரூ,3,000 உதவித் தொகையும் வழங்கினார். தற்போதுவரை அவர்கள் அந்த உதவித் தொகையைப் பெற்று வருகிறார்கள். திராவிட இயக்கம் தோன்றியதே சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகத்தான். 1921-ம் ஆண்டிலேயே அனைத்து சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி.

திறந்து வைக்கப்பட்ட மணிமண்டபங்கள்

அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, கடுமையாக போராடி 1950 முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும். அதுமட்டுமல்ல தி.மு.க ஆட்சியில்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை 31% சதவிகிதமாக உயர்த்தினோம். அதேபோல் பட்டியலின மக்களுக்கு 16-லிருந்து 18 சதவிகிதமாகவும், பழங்குடியின மக்களுக்கு 1% சதவிகிதம் தனியாகவும் இட ஒதுக்கீடு வழங்கினோம்.

மேலும் பிற்படுத்தபட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டை பிரித்து வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களா அறிவித்து தனி இட ஒதுக்கீடு கொடுத்தோம். இஸ்லாமியர்களுக்கு 3.5% சதவிகிதமும், அருந்ததியர்களுக்கு 3% சதவிகிதமும் உள் ஒதுக்கீடு கொடுத்தோம். அதுமட்டுமல்ல, இன்றைக்கு சமூகநீதி உரிமைகளை அகில இந்திய அளவிலும் கிடைக்கப் போராடி வரும் ஒரே கட்சி தி.மு.க-தான். நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட, நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதுதான் என் இலக்கு.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்

அதனால்தான் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம்” என்றார். தி.மு.க-விலிருந்து விலகி தே.மு.தி.க-வுக்குச் சென்ற ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத், அதன்பிறகு பா.ஜ.க-வில் ஐக்கியமானார். தற்போது பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவராக இருக்கும் அவர், தன்னுடைய தந்தைக்கு மணிமண்டபம் திறக்கப்படும் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அதேபோல மயிலம் தொகுதியின் பா.ம.க எம்.எல்.ஏ-வான சிவக்குமாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பக... மேலும் பார்க்க

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' - கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பய... மேலும் பார்க்க

"பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது" - கனிமொழி எம்.பி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயல... மேலும் பார்க்க

20 கிலோ தங்கம், 300 கேள்விகள்; தாம்பரம் ரூ.4 கோடி விவகாரத்தில் புதுச்சேரி பாஜக எம்.பி-யிடம் விசாரணை!

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையில் இருந்த பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்தப் பணத்... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடங்கள்!' - கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே... மேலும் பார்க்க