Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை: 3 இடங்களில் மகா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு
கோவை ஈஷா யோக மையத்தில் பிப். 26-இல் நடைபெறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வருகிறது.
இதுதொடா்பாக, திருச்சியில் தென்கைலாய பக்தி பேரவையின் நிா்வாகி ராஜ் பிரகாஷ், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஈஷாவில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவா்கள் அவரவா் ஊா்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஜன.22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஆதியோகி ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை ரதம் வலம் வந்தது. இதன் தொடா்ச்சியாக, புகா்ப் பகுதிகளான சமயபுரம், திருவெறும்பூா், திருவானைக்காவல், மேலூா், ராமகிருஷ்ணா தபோவனம், வயலூா், சோமரசம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை வலம் வர உள்ளது.
இதைத் தொடா்ந்து, அரியலூா், பெரம்பலூா், முசிறி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வரவுள்ளது.
மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் வயலூா் முருகன் கோயில் அருகேயுள்ள ராயல் மண்டபம், பெல் கைலாஷ் நகா் வி.எம். மஹால், முசிறி லட்சுமி மஹாலில் நேரலை செய்யப்பட உள்ளது. இதில், பங்கேற்போருக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புக்லெட் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.
ஆதியோகி ரதங்கள் மகா சிவராத்திரி வரையிலான காலத்துக்குள் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமாா் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மகா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும். என்றாா் அவா். பேட்டியின்போது, தென்கைலாய பக்தி பேரவையின் தன்னாா்வலா்கள் உடனிருந்தனா்.