செய்திகள் :

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த இளைஞர் எரித்துக் கொலை; நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்; பின்னணி என்ன?

post image

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். 

இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (வயது 26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த தம்பதியின் மகள் கெளசி சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

கோபிநாத் டிப்ளமோ படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்குச் சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது.

trichy murder
trichy murder

இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மகன் கோபிநாத் வேலம்பட்டி கிராமத்தில் வயலில் உள்ள வீட்டின் முன்பு வாசலில் நேற்று (ஏப்ரல் 20) இரவு படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக அவரது தாயார் செல்வி வெளியே வந்து பார்த்தபோது கட்டிலில் படுத்திருந்த தனது மகன் கோபிநாத் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் சத்தம் போட்டு உள்ளார்.

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துள்ளனர்.

இருந்தபோதிலும், அதற்குள் கோபிநாத் உடல் முழுவதும் எரிந்து போனது. இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் டி.எஸ்.பி சுரேஷ்குமார், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தைக் கைப்பற்றி, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கோபிநாத்
கொலை செய்யப்பட்ட கோபிநாத்

அதோடு, திருச்சியிலிருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.

வாசலில் படுத்து உறங்கிய வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னையில் மனைவி கண் முன் வெட்டி கொல்லப்பட்ட 'ஏ பிளஸ் ரௌடி' ராஜ்

சென்னை மணலி சின்ன சேக்காடு வேதாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40).இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலைய 'ஏ பிளஸ்' ரௌடி. இவர் கடந்த 20-ம் தேதி மாலை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் மெ... மேலும் பார்க்க

விருதுநகர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவவீரர்; விரட்டி பிடித்த மக்கள்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்து சென்ற‌ மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

மும்பை: வாகனங்களுடன் வாள் வீச்சு சண்டை; ரகளை செய்த சிறுவரை வளைத்துப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

மாநகராட்சி பேருந்துமும்பை பாண்டூப் பகுதியில் மாநகராட்சி பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சிறுவர் கையில் வாளுடன் பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.அவர் பேருந்து முன்பு நின்... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமம் வழங்க ரூ.3,000 லஞ்சம்; துப்புரவு ஆய்வாளருக்கு 11 வருடம் கழித்து 2 ஆண்டுகள் சிறை

கரூர் தான்தோன்றிமலையில் ரமேஷ்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இதற்கு உரிமம் பெற கடந்த 2014 - ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கரூர் நகராட்சியில் தான்தோன்றிமலை பிரிவு துப்புரவு ஆய்வாளரக அப்போது பணியாற்றி... மேலும் பார்க்க

திருச்சி: 'சாக்கடை கலந்த குடிநீரா, திருவிழா அன்னதானமா?' - மூன்று பேர் பலியும், அதிர்ச்சி பின்னணியும்

திருச்சி, உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் , இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 3 பேர் மர்மமான ம... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்: சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்து ஊழியா் பலி - திருச்சியில் சோகம்

திருச்சி, திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சாா்பில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்ற விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க