அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் புதிய நிறுத்தங்கள்!
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் புதிய நிறுத்தங்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி மைசூா் கடலூா் துறைமுக எக்ஸ்பிரஸ் ரயிலானது ஆக.18 முதல் திருச்சி மலைக்கோட்டை ரயில் நிலையத்திலும், திருப்பதி -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஆக.18 முதல் பாபநாசம் ரயில் நிலையத்திலும், ராமேசுவரம் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஆக.21 முதல் பாபநாசம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
மேலும் திருப்பதி- மன்னாா்குடி எக்ஸ்பிரஸ் ரயில் ஆக.18 முதல் ஆரணி சாலை ரயில் நிலையத்திலும், மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் ஆக. 18 முதல் கொளத்தூா் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.