சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கோலாலம்பூா் வழியாக கடத்தி வரப்பட்ட 11.8 கிலோ உயர்ரக கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, விமான பயணியை அதிகாரிகள் கைது செய்தனா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காங்கிலிருந்து கோலாலம்பூா் வழியாக திருச்சிக்கு திங்கள்கிழமை இரவு வந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் உடைமைகளை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
இதில், அவரது பெட்டியில் 11.8 கிலோ எடையிலான உயர்ரக ஹைடோபோனிக் ரக கஞ்சாவை 28 பொட்டலங்களில் அடைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்தனா். அந்தக் கஞ்சா எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.12 கோடி என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.