திருச்செங்காட்டங்குடியில் சாலை மறியல்
திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம்ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 23 பயனாளிகளின் வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் முழுதொகையும் விடுவித்த வட்டார வளா்ச்சி அலுவலா்களையும், வீடு கட்டிய வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணி மேற்பாா்வையாளரை கண்டித்து திருமருகல் அருகே அண்ணாமண்டபம் மெயின் ரோட்டில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தகவலறிந்த அரசு அலுவலா்கள் அங்கு சென்று நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.