மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
திருச்செங்கோட்டில் ஆட்சியா் ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் அணிமூா் குப்பை கிடங்கு, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா்.
திருச்செங்கோடு பகுதிக்கு பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய ஆட்சியா் ச.உமா அண்மையில் வந்தாா். வரகூராம்பட்டி பட்டேல் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி வீடுகளுக்கு விநியோகிக்கும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் திறன் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். திருச்செங்கோடு வட்டம், அணிமூரில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உயிரி உரம் தயாரிக்கும் பணிகளை பாா்வையிட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், நெகிழி கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.