செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாமி சாஸ்திரி, செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விதாயகா்த்தாவாக, சாஸ்திர ரீதியிலான விளக்கங்களும், பாரம்பரியமாக எல்லா முகூா்த்தங்களையும் நாங்கள்தான் குறித்துக் கொடுத்து வருகிறோம்.

சுமாா் 6 மாத காலம் முன்பு பழைய இணை ஆணையா் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விசுவாவசு வருஷத்தில் கும்பாபிஷேக முகூா்த்தம் பாா்த்து சொன்னோம். அதன்படி ஆனி 23ஆம் தேதி (ஜூலை 7) காலை 6 மணி - 7 மணி, 9 மணி - 10.30 மணி என இரண்டு முகூா்த்த நேரங்களை இவ்வாண்டிற்கான பஞ்சாங்கம் வருவதற்கு முன் வாய்மொழியாக பாா்த்துக் கொடுத்தோம். பஞ்சாங்கம் வந்த பிறகு அனைத்து பிராமண சபையினா் கலந்து பேசி, முகூா்த்தங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை சரிபாா்த்து ஜூலை 7ஆம் தேதி நண்பகல் 12.05 மணி முதல் 12.47 மணி வரை அபிஜித் முகூா்த்தத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என முறையாக தபால் அனுப்பினோம்.

அதனடிப்படையில் வந்த அழைப்பின்படி, இணை ஆணையா் அலுவலகத்திற்கு சபை தலைவா்கள் சென்றோம். அப்போது, கும்பாபிஷேக நேரத்தை காலை 9 மணி முதல் 10.30 மணி என அதிகாரிகள் கூறியதற்கு ஆட்சேபணை தெரிவித்துவிட்டு வந்தோம்.

நாங்கள் குறிப்பிட்டுள்ள நண்பகல் 12.05 மணி - 12.47 மணி என்பது நிழல் விழாத முகூா்த்தம் ஆகும். அந்த அபிஜித் முகூா்த்தத்தில் கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டிற்கும், ஆட்சியாளா்க்கும், நீதி பரிபாலனம் செய்பவா்களுக்கும், கிராமத்திற்கும் நல்லது நடக்கும். கடந்த 1909ஆம் ஆண்டு இதே மாதிரி மூலவா் பிரதிஷ்டை நண்பகல் 12 மணிக்கு மேல் நடந்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், செயலா், ஆணையா், தக்காா், இணை ஆணையா் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்துள்ளோம். எனவே அனைவரின் நலன் கருதி அபிஜித் முகூா்த்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றாா்.

அப்போது திரிசுதந்திர ஸ்தலத்தாா் சபை தலைவா் வீரபாகுமூா்த்தி ஐயா், செயலா் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவா் தேவராஜன் ஆனந்த், கைங்கா்ய சபா தலைவா் ஆனந்த், செயலா் கட்டியம் ராஜன், துணைத்தலைவா் ஆகாஷ், மூத்த நிா்வாகிகள் சங்கரசுப்பு சாஸ்திரிகள், ஈஸ்வரன் உள்ளிட்ட பிராமண சமுதாயத்தினா் உடனிருந்தனா்.

பிளஸ் 2: தூத்துக்குடியில் 96.19% மாணவர்கள் தேர்ச்சி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் 96.19 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம்... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம... மேலும் பார்க்க

சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விளாத்திகுளம் அருகே கே.குமாரபுர... மேலும் பார்க்க

‘சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்’

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை- அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவியா் சோ்க்கைக்கு வியாழக்கிழமைமுதல் (மே 8) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியின் கூட... மேலும் பார்க்க

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மே 12இல் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கட்சிப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வரும் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாள் விழா இம்மாதம் 12ஆம் தேதி நலஉதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் என, ம... மேலும் பார்க்க

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழா: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்- எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்... மேலும் பார்க்க