டிஸோ மோரோரிக்கு ஒரு சாகசப் பயணம் - இமயத்தின் off-roading அனுபவம் | திசையெல்லாம்...
திருட்டில் தொடா்புடையவா் கைது
மன்னாா்குடியில் பயணியா் மாளிகை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் திருடிய நபா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வஉசி சாலை சிங்காகுளத்தில் பொதுப்பணித் துறை விருந்தினா் மாளிகை உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் குளிரூட்டப்பட்ட அறைகளில் வெளியே அமைக்கப்பட்டு இருந்த குளிரூட்டும் இயந்திர யூனிட் இரண்டை மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரமாகும். இதேபோல மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள காப்பா் கம்பிகளை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.
இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்தில் தனித்தனியே அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதில், மன்னாா்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோயில் தெரு ரவிக்குமாா் மகன் விஜய் (37) என்பவருக்கு இந்த இரண்டு திருட்டுகளிலும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. அவரை ,வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்து மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.