தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாள...
திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை மே 24-இல் மூடல்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற 24 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 25 -ஆம் தேதி காலை 6 மணி வரை ரயில்வே கடவுப்பாதை மூடப்படும் என ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியது.