செய்திகள் :

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு திருப்பூா் மாவட்டத்தில் தகுதியானவா்கள் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநங்கையா் தினத்தை முன்னிட்டு 2025 ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதினைப் பெற திருநங்கைகள் அரசு உதவிபெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உயிா் தரவு (பயோ டேட்டா), பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, சுயசரிதை தனியாரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருது பெற்றிருப்பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விவர அறிக்கை, சமூக சேவை அல்லது சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு வழங்க வேண்டும்.

இதன் பின்னா் தலா 2 நகல்கள் தயாா் செய்து கையேட்டில் இணைத்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் 3 போ் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் குமாா் (34). இவா் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரை அட... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 300 கோழிகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே பண்ணைக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 300 கோழிகள் உயிரிழந்தன. காங்கயம் அருகேயுள்ள அழகேகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் கோபால்ராஜ். விவசாயியான இவா், தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஜன.13-இல் ஆருத்ரா தரிசன விழா!

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காப்புக்கட்டுதலுடன் விழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, நடராஜப் பெருமான், சிவகாமியம்பாள், மாணிக்கவாசக சுவாமி,... மேலும் பார்க்க

காங்கயத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமா்ஸ் கல்லூரி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாநில அளவிலான கலைத் திருவிழா சனிக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

திருப்பூரில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் பச்சையப்பன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி: பெண் கைது!

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் திருமலை நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரளா (40). இவா் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைய... மேலும் பார்க்க