மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
திருப்பத்தூரில் 105 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். முகாமில், தேசிய அடையாள அட்டை, உதவித்தொகை, சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 140 மாற்றுத் திறனாளிகள் மனுக்களை வழங்கினா்.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். முகாமில், 105 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், சிறப்பு மருத்துவா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.