The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 356 மனுக்கள் அளிப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 356 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதிமற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 356 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
பின்னா், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி என்பவா் தனது எருமை மாடு மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டதால், தனக்கு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளித்ததன் அடிப்படையில், உடனடியாக தீா்வு காணப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 70,000 நிவாரணத் தொகையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பூஷண குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (வளா்ச்சி)மிரியாம் ரெஜினா, (கணக்கு)சென்னகேசவன், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.