Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்...
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பதிவு செய்யலாம்
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பதிவு செய்ய கரும்பு விவசாயிகள் பதிவு செய்யலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 2024-25-ஆம் ஆண்டு அரைவை பருவத்தில் 1,329 விவசாயிகளிடம் இருந்து 66,821.79 மெ.டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது.
ஆலை அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 349 வீதம் 66821.79 மெட்ரிக் டன்களுக்கு ரூ. 2.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 2025-26-ஆம் ஆண்டு நடவு பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ், அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவுக்கு, ஏக்கருக்கு ரூ. 7,450 மானியமாகவும், அகலபாருடன் கூடிய ஒருபரு விதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200 மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்ய
கேட்டுக் கொள்ளப்படுகிறது.