செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்?- உயர் நீதிமன்றம் கண்டனம்!

post image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை வெளியிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வருகிற பிப். 18 ஆம் தேதி சென்னையில் 'வேல் யாத்திரை' பேரணி நடத்த இந்து முன்னணி அமைப்பு அனுமதி கோரியது.

இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ், பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து வரும் நிலையில், இன்றைய விசாரணையில், 'அமைதியான முறையில் பேரணி நடத்தக் கோரியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை' என்று மனுதாரர் தரப்பு கூறியது.

"இந்து முன்னணி அமைப்பு பேரணி நடத்த அனுமதி கோரும் பகுதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்தது. மேலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து, முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். எனவே, போராட்டத்துக்கு அனுமதி தர முடியாது" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், "திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு? திருப்பரங்குன்றம் மலையைக் காக்க, சென்னையில் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்" எனக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலையில் இந்து, முஸ்லீம்கள், ஜெயின் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கும்.

பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது.

ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க மதரீதியான போராட்டக்காரர்கள், கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட்டால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறிய நீதிபதி, இறுதியாக பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பனிச் சரிவில் சிக்கிய வீரர் பலி! ஒரே வாரத்தில் 4வது மரணம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் விளையாட்டின் போது பனிச் சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர் பலியாகியுள்ளார்.கொலராடோவின் க்ரெஸ்டடு பட்டே பகுதியைச் சேர்ந்த சாரா ஸ்டெயின்வாண்ட் (வயது 41) என்ற பனிச்சறுக்... மேலும் பார்க்க

திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வ... மேலும் பார்க்க

வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!

இலங்கையில் பிரபல கொலைகார கும்பலின் தலைவனை வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மற்... மேலும் பார்க்க

மகாகும்பமேளா: புனித நீராடிய ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(சனிக்கிழமை) புனித நீராடினார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பக... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க