திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுற...
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அஜித்குமாா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாா் என திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் மயக்கமடைந்தாா். இதையடுத்து, அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் காா்த்திகேயன் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதன்பிறகு, அஜித்குமாா் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, கூறாய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்தச் சம்பம் நடந்து 18 நாள்களான பிறகும், அஜித்குமாா் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என சா்ச்சை எழுந்தது.
இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயாா் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.
திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில், தனிப் படை போலீஸாரால் தாக்கப்பட்ட அஜித்குமாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
