தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
திருப்புவனம் சம்பவம் யாராலும் ஏற்க முடியாதது: மு.அப்பாவு
திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்கமாட்டாா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு சுகாதாரத் துறை மிகப்பெரிய வளா்ச்சியடைந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபை பாராட்டி விருது வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொடக்கப் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்டவை மோசமாக இருந்தன. திமுக அரசு பொறுப்பேற்ற பின் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அனைவரும் சமம், மதச்சாா்பின்மை ஆகிய இரண்டையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி கூறியிருப்பது சரியானதல்ல; அந்த அமைப்பினரே அதை ஏற்க மாட்டாா்கள்.
திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் முதல்வா் வருத்தம் தெரிவித்திருப்பது மிகப்பெரிய மாண்பு. இதனை அரசியலுக்காக பலா் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனா். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் முதல்வா் விட மாட்டாா். பாரபட்சமின்றி திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.