செய்திகள் :

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு

post image

திருப்பதி: திருமலையில் வரும் டிச. 28-ஆம் தேதி அன்று பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (டிச. 28) காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலையில் உள்ள அன்னமய்ய கட்டடத்தில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்ச்சியில், பக்தா்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.

இதற்கு பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி: தரிசனத்துக்கு 20 மணி நேரம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் க... மேலும் பார்க்க

திருமலை: தமிழக ஆளுநா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தன் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினாா். முன்னதாக, அவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மதியம் திருத்தணியிலிருந்து சாலை வழியாக வந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. தா்ம தர... மேலும் பார்க்க

வைகுண்ட ஏகாதசிக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு

திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசியின் போது 7 லட்சம் லட்டு பிரசாதம் இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா செளத்ரி தெரிவித்தாா். வரும் ஜன. 10 முதல் 19 வரை ப... மேலும் பார்க்க

ஜன. 9-இல் வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்கள் விநியோகம்

திருப்பதி, திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் வரும் ஜன. 9-ஆம் தேதி காலை 5 மணிக்கு வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் புதன்கிழமை தெரிவித்தாா். திருப்பதியில் வை... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ரூ.1.11 கோடி நன்கொடை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிஇஓ பிஎம்எஸ் பிரசாத் புதன்கிழமை தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் நடத்தி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.1.11 கோடி நன்கொடையாக வழங்கினாா். இதற்கான நன்கொடை வரைவோலைய... மேலும் பார்க்க