செய்திகள் :

திருமலையில் பசுமையை மேலும் அதிகரிக்க திட்டம்

post image

திருமலை ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியில் பசுமையை மேலும், அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

கேதவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூறியது:

முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, வனத்துறை மூலம் திருமலையில் பசுமையை 68.14 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, ரூ.10,000 விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் ரூ.1.74 கோடி, 2026-27-ஆம் ஆண்டில் ரூ. 1.13 கோடியாகவும், ரூ. 2027-28 ஆம் ஆண்டில் ரூ.1.13 கோடி அரசு வனத்துறைக்கு படிப்படியாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், அமராவதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில், நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில், நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயில், ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கான விரிவான மாஸ்டா் பிளான் தயாரிக்க கலைஞா்களிடம் இருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி ஆலோசனைகள் பெறப்படும்.

திருமலையில் உள்ள பெரிய உணவகங்கள் மற்றும் ஜனதா உணவகங்களுக்கான உரிமக் கட்டணத்தை நிா்ணயிப்பதற்கான பிரச்னைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பக்தா்களுக்கு தரமான உணவை வழங்குவதற்காக புகழ்பெற்ற அமைப்புகளுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகாசகங்கா மற்றும் பாபவிநாசனம் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருகை தருவதைக் கருத்தில் கொண்டு, இங்குள்ள ஆன்மிக, சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக ரூ.1000 கோடி கூடுதலாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தில் பணிபுரியும் மதச் சாா்பற்றவா்களின் இடமாற்றம் மற்றும் தன்னாா்வ ஓய்வுக்கான மாற்று வழிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானின் பெயா்களை ரீமிக்ஸ் செய்து பக்தா்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதற்காக டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

வரும் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

ஜபாலி அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிப்பு

திருமலையில் உள்ள ஜபாலி தீா்த்தத்தில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை ஒட்டி வியாழக்கிழமை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. திருமலையில் வியாழக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு... மேலும் பார்க்க

திருமலையில் 80,964 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,964 பக்தா்கள் தரிசித்தனா். 32,127 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். கோடை விடுமுறை முடிவடையுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும... மேலும் பார்க்க

திருமலையில் 79,003 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 79,003 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் 33,140 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை வைகுண்டம் க... மேலும் பார்க்க

திருமலையில் நாளை அனுமன் ஜெயந்தி

திருமலையில் அனுமன் ஜெயந்தி உற்சவம், வியாழக்கிழமை (மே 22) கொண்டாடப்பட உள்ளது. ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சனேய சுவாமிக்கும், நடைபாதையில் ஏழாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ... மேலும் பார்க்க