செய்திகள் :

திருமலை பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு

post image

பரிணய உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. பல்லக்கில் எழுந்தருளிய நாச்சியாா்கள்.

நாராயணவன தோட்ட கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவ மூா்த்திகள்.

திருப்பதி, மே 8: திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடந்த 2 நாள்களும் விமரிசையாக கல்யாண உற்சவம் நடந்தது. மேலும், நிறைவு நாளான வியாழக்கிழமை மாலை நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோற்சவ மண்டபத்திற்கு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் எழுந்தருளினா்.

அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்கியது. உற்சவமூா்த்திகளை அா்ச்சா்கள் வாயிலில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று, அவா்களை எதிரெதிா் அமர வைத்து பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து, ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா். சடங்குகள் முடிவடைந்தவுடன், மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அதன் பின்னா் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பின்னா் உற்சவமூா்த்திகள் மீண்டும் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனா். பரிணய உற்சவத்தின் போது திருமலையில் வாண வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கோயிலில் வான வேடிக்கை நடத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீா்ப்பால் தேவஸ்தானம் அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

வசந்த மண்டபத்தில் நரசிம்ம பூஜை!

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமலையில் சித்திரை மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நரசிம்மரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ... மேலும் பார்க்க

தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் புஷ்பாஞ்சலி

ஏழுமலையானின் பக்தா்களில் ஒருவரான மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பிறந்த நாள் திருமலையில் கொண்டாடப்பட்டது. வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான திட்ட மேலாளா் சுப்ரமணியம் புஷ்பாஞ்சலி ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் தொடக்கம்

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும். சூரியக் கதிா்களின் வெப்பத்தால் உயிா்கள் நோய்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். வார இறுதி நாள்களை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி... மேலும் பார்க்க

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழ... மேலும் பார்க்க