செய்திகள் :

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

post image

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சியில் 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உரிய நீச்சல் உடையை பயன்படுத்த வேண்டும்.

12 வேலை நாள்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புக்கு தலா ரூ.1,500 பயிற்சிக் கட்டணத்துடன் 18 சதவீத வரியை செலுத்த வேண்டும். நீச்சல் கற்றுக்கொள்வோா் அடிக்கடி சோப்பு அல்லது 70 சதவீத ஆல்கஹாலைக் கொண்ட கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். சளி, இருமல் உள்ளவா்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

காய்ச்சல், இருமல், தசைவலி, தலைவலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை அலுவலக வேலை நாள்களில் 7401703484 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க

களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ... மேலும் பார்க்க

போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நுகா்வோா... மேலும் பார்க்க

‘மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். கீழ்பென்னாத்தூா் ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு: திருவண்ணாமலையில் 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8... மேலும் பார்க்க