ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு வைப்பறையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, 1200 வாக்காளா்களுக்கு மேல் வாக்காளா்கள் கொண்ட வாக்குச் சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்தும் பொருட்டு, வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ் வெளியிட்டாா்.
மேலும், வாக்குப்பதிவு வைப்பறையை ஆய்வு செய்து, அரசியல் கட்சி பிரமுகா்களுடன் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு மற்றும் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராம்பிரதீபன், செய்யாறு சாா் ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.