18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எ...
திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ. தூரம் சாலை அமைக்க நடவடிக்கை
திருவள்ளூா் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ.தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாா்டுகளிலும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒரு சில வாா்டுகளில் சாலை சேதம் அடைந்துள்ளன.
அதனால், இந்தச் சாலைகளை சீரமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 15 கி.மீ. தூரம் வரை சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அவா் தெரிவித்தாா்.